search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெற்றிவேல் உண்ணாவிரதம்"

    தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் சென்னையில் அம்பேத்கார் கல்லூரி எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் 17-ந்தேதி உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். #Vetriivel #HungerStrike
    சென்னை:

    பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் ஒருவர் ஆவார்.

    கடந்த 1 வருடத்துக்கும் மேலாக தொகுதியில் எம்.எல்.ஏ.வாக பணியாற்ற முடியாத காரணத்தால் மக்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்ய முடியவில்லை என்று அரசு மீது குற்றம் சுமத்தி வந்தனர்.

    இதைத் தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் அ.தி.மு.க. அரசை கண்டித்து தங்களது தொகுதியில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தனர்.



    ஆண்டிப்பட்டி தொகுதியில் இன்று தங்க தமிழ்ச் செல்வன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

    இதேபோல் சென்னையில் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வெற்றிவேல் அம்பேத்கார் கல்லூரி எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் 17-ந்தேதி உண்ணாவிரதம் இருக்க போலீசில் அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் அந்த இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று போலீசார் அனுமதி கொடுக்க மறுத்து விட்டனர்.

    இதுகுறித்து வெற்றிவேல் கூறுகையில், இதற்கு முன்பு புரட்சித்தலைவி அம்மா கைதானபோது இந்த இடத்தில் நான் உண்ணாவிரதம் இருந்துள்ளேன். எனவே இப்போது போலீசார் எனக்கு அனுமதி கொடுக்க மறுப்பது வியப்பாக உள்ளது. எனவே நான் நீதிமன்றம் சென்று முறையிடுவேன். இதே இடத்தில் மீண்டும் அனுமதி பெற்று உண்ணாவிரதம் இருப்பேன் என்றார். #Vetriivel  #HungerStrike

    ×